Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் மெர்சலாயிட்டேன்! பிக்பாஸ் வையாபுரி உற்சாகம்

நடிகர் வையாபுரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் மாற்றம் கிடைத்துள்ளது என்பதை அவரே சமீபத்தில் கூறியிருந்தார். இவரின் சினிமா பயணங்கள் மிகவும் நீளமானது.

உடன் பிறப்பு படத்தில் சத்யராஜுடன் தொடங்கி தற்போது கலகலப்பு படத்தில் வந்து நிற்கிறார். கார்த்திக், கமல், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என பல படங்கள். 90 களில் இவர் இல்லாத படங்கள் இல்லை என சொல்லலாம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தற்போது ட்விட்டரில் நான் மெர்சலாயிட்டேன் என கூறியதோடு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். மெர்சல் என்று சொன்னதும் விஜய்யுடன் அவர் நடித்த படங்கள் நினைவிற்கு வரும் தானே..

விஜய் வையாபுரி காம்பினேஷன் என்றதும் முதலில் பலருக்கும் நினைவிற்கு வருவது துள்ளாத மனமும் துள்ளும். விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

துள்ளாத மனமும் துள்ளும் கல்யாண சுந்தரம், பிரியமானவளே - ஸ்டெப்னி, திருப்பாச்சி - போலிஸ் கான்ஸ்டபிள், சிவகாசி, போக்கிரி, வில்லு படங்களில் நண்பனாகவும், வேலாயுதம் படத்தில் ஸ்பீடு சந்தானத்தின் சகோதரராகவும் நடித்துள்ளார்.

Comments