Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுதான் விஜய்யின் உண்மையான ஆசை! மனம் திறந்த இயக்குனர்

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பல சோதனைகளை தாண்டி தான் பிரபலமாகியிருக்கிறார்கள். நடிகர் விஜய் இன்று பலரும் தளபதி என்று சொல்லுமளவிற்கு உயர்ந்திருக்கிறார். பல ஹிட் படங்கள் நடித்துவிட்டார்.

நிறைய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் ஆசையை பற்றி இயக்குனர் விஜய் மில்டன் பேட்டியில் கூறியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த எனக்கு இரண்டாவது படமே விஜய் போன்ற ஓரு பெரிய நடிகருடன் செய்ய பிரியமுடன் படத்திலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த நேரத்தில் அவர் சின்ன பையன் தான்.

நாங்கள் இருவரும் நெருக்கமான நட்பாகிவிட்டோம். விஜய் அப்போது செய்யும் லூட்டிகள் பல. நானும் சேர்ந்துவிட்டால் ரொம்ப ஜாலி தான். அப்போது விஜய் எனக்கு நடிப்பில் இஷ்டமில்லிங்கண்ணா.

2000க்கு பிறகு இயக்குனராகி விடுவேன் என கூறினாராம். படப்பிடிப்பின் ஒளிப்பதிவாளர் ஜீவாவை பற்றி தான் அடிக்கடி பேசுவாராம். ஒரு வேளை விஜய் இயக்குனராகியிருந்தால் நான் அவரிடம் ஒளிப்பதிவாளராகியிருப்பேன்.

நிலாவே வா, நெஞ்சினிலே என அவர் படங்களில் பணியாற்றியது மறவா நினைவுகள் என்கிறார் விஜய் மில்டன்.

Comments