Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கவிஞரான கண்ணதாசன் பேரனான நடிகர் ஆதவ்க்கு திருமணம்! தேதி இதோ

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் என முக்கிய நூல்களை எழுதினார். சுயசரிதை எழுதி தன்னை போல் யாரும் வாழக்கூடாது என சொல்லிவிட்டு சென்றார்.

இவரின் பேரனான நடிகர் ஆதவ் யாமிருக்க பயமே, பொன் மாலை பொழுது போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சென்னையை சேர்ந்த வினோதினி என்பருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 6 ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் வள்ளியம்மை திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.