Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா செய்தவேலையால் நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். ஹிந்தி படங்கள், ஆங்கில படங்கள் என நடித்து வரும் இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.

இவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவத்தில் டாக்டராக பணியாற்றியவர். பிரியங்கா உலக அழகியான ஆனது இவர்கள் உத்திரபிரதேசம், பரேலியில் வசித்தார்கள். எனவே இவர்களுடைய ஓட்டுரிமை இங்கு தான் இருந்துள்ளது.

பின் பிரியங்கா படங்களில் பிசியானதால் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். மேலும் தேர்தலின் போது உரிய தொகுதிக்கு வந்து ஓட்டு போடுவதில்லையாம்.

இதனால் உள்ளூரில் இருந்தவர் ஒருவர் பிரியங்கா மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து பிரியங்கா மற்றும் அவரது அம்மாவின் பெயரை நிக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளார்கள். பிரியங்காவின் அப்பா கடந்த 2013 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.