Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸை தொடர்ந்து நெட்டிசன்கள் கையில் சிக்கிய ரஞ்சித்

தமிழ் சினிமா யாருக்கு அஞ்சுகின்றதோ இல்லையோ கண்டிப்பாக நெட்டிசன்களுக்கு அஞ்சும். அவர்களை மீறி இங்கு எந்த படமும் பெரிய ஹிட் ஆனால் ஆச்சரியம் தான்.

ஏனெனில் கொஞ்சம் சுமாராக இருந்தாலே கலாய்த்து எடுத்துவிடுவார்கள், இந்நிலையில் முருகதாஸ் சில வருடங்களுக்கு முன்பு ‘அறம்’ கோபியின் கதையை திருடி கத்தி எடுத்தார் என கூறப்பட்டது.

சமீபத்தில் அறம் பார்த்தவர்கள் முருகதாஸை கிண்டல் செய்ய, நேற்று ரஞ்சித் மாட்டிக்கொண்டார். ஆம், ரஞ்சித்தின் மெட்ராஸ் கதையும் கோபியுடையது தான் என பல நாட்களாக ஒரு செய்தி உலா வந்தது.

நேற்று ரஞ்சித் அறம் படத்திற்கு நயன்தாராவிற்கு வாழ்த்து சொன்னாரே தவிர, கோபி பெயரை எங்கும் குறிப்பிடவில்லை, உடனே நெட்டிசன்கள் இதை குறிப்பிட்டு ரஞ்சித்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments