Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் அந்த கோபம் குறைந்தால் தான் விஜய்க்கு ஜோடி?

நயன்தாரா கால்ஷிட் கிடைக்காதா என்று பலரும் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க அவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது, இதில் சோலோ ஹீரோயினாகவே 3 படங்கள் வரை நடித்து வருகின்றார்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றதாம், இதை நாம் முன்பே கூறியிருந்தோம்.

ஆனால், நயன்தாராவிற்கும் இயக்குனர் முருகதாஸிற்கும் கஜினி டைமில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததாம், அதன் காரணமாகவே இன்று வரை இந்த கூட்டணி மீண்டும் இணையாமல் உள்ளது.

இதையெல்லாம் நயன்தாரா மறந்தால் விஜய்-நயன்தாரா கூட்டணி அமையும், மேலும், அதே நேரத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்தால் படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என தயாரிப்பு தரப்பு யோசித்து வருகின்றது.

Comments