Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படத்திற்கு பிரபல தாதா நிதியுதவி! திடுக்கிடும் தகவல்

பாலவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவதி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இன்னும் சென்சார் வழங்கப்படாதது ஒரு பக்கம், கொலை மிரட்டல்கள் மறுபக்கம் என படக்குழு தத்தளிப்பில் உள்ளது. அரசியல் தாக்குதல்களுக்கும் இப்படம் ஆளாகியுள்ளது.

எந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன் என நடிகை தீபிகா சொல்ல, சர்ச்சையான காட்சிகள் எதுவும் இல்லை என இயக்குனர் எப்படியாவது படத்தை வெளியிட முனைப்பு காட்டிவருகிறார்.

ஏற்கனவே இவர் அதே கூட்டணியில் பாஜிரோ மஸ்தானி படத்தை இயக்கி வெளியிட்டு வசூல் அள்ளினார். ஆனால் தற்போது அவரின் பத்மாவதி படத்திற்கு எதிர்பாராத அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இப்படத்திற்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நிதியுதவி அளித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது புகார் தானே தவிர எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Comments