Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை தீபிகா படுகோனுக்கு குவியும் ஆதரவுகள்! முதல்வர் செய்த விசயம்

நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவதி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. தலையை வெட்டுங்கள், உயிரோடு கொளுத்துங்கள் என அரசியல் பிரமுகர்களே மக்களை தூண்டி வருகின்றனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பெரும் ஆதரவுகள் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாது, மற்றவர்களிடத்திலிருந்தும் குவிந்து வருகிறது. இதில் பிரகாஷ் ராஜ், கமல் ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில் கன்னட நடிகர் உபேந்திரா, கணேஷ், நடிகை ராகினி திவேதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தீபிகா வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார். மேலும் கன்னட அமைப்பை சேர்ந்த சிலரும் ஆதரவளித்துள்ளனர்.