Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தை தொடர்ந்து பத்மாவதி விசயத்திலும் தலையிட்ட ஹெச்.ராஜா!

விஜய் நடித்த மெர்சல் படம் சமீபத்தில் வெளியானவுடனே சில அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். இன்னும் படம் உலகளவில் நல்ல வசூல் செய்து வருகிறது.

இப்படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் அரசியல் பிரமுகர் ஹெச்.ராஜா. இவர் தற்போது சர்ச்சையாகியுள்ள பத்மாவதி படம் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவ்விசயத்தில் கமல்ஹாசன் தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதில் அவர் சரித்திர நிகழ்வுகளை கொச்சைப்படுத்தி படம் எடுத்திருப்பதை கமல் ஆதரித்திருக்கிறார்.

சரித்திர நிகழ்விகளை கேலி செய்வதற்கு கமல் போன்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவரவர் பிடித்த மாதிரி படம் எடுக்கலாம். ஆனால் மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்கலாமா என அவர் கேள்வி கேட்டுள்ளார்.