Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் அசோக் குமாரின் உடல் தகனம்! குடும்பத்தில் சோகம்

சசிகுமாரின் மைத்துனரான தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வரும் அவர் கந்து வட்டி கொடுமையால் சென்னை வளசரவாக்கத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார்.

ஈசன், போராளி, கொடி வீரன் போன்ற படங்களின் இணை தயாரிப்பாளராக அவர் பணியாற்றியுள்ளார். அவரின் இந்த முடிவு சினிமா பிரபலங்களை கந்து வட்டி கொடுமைக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது.

இந்நிலையில் அவரின் மறைவுக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்துள்ள நிலையில் அசோக் குமாரின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கோமதிபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின் தகனம் செய்யப்பட்டது.

அவரின் மனைவி வனிதா, மகன் சக்தி (12 வயது) மகள் பிராத்தனா (9 வயது) என குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலரும் வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Comments