Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்.கே நகர் தேர்தலில் விஷால் ஜெயிப்பாரா? அரசியல் புள்ளிகளின் ஆதரவும், எதிர்ப்பு

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல எதிர்ப்புகள் வந்தாலும் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

விவசாயிகளின் பிரச்சனை, பட ரிலீஸ் பிரச்சனை, ஜி.எஸ்.டி என ஆரம்பம் முதலே பல முயற்சிகள் எடுத்து வருகிறார் அவர். சமீபத்தில் கூட "V Shall" என புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வந்தது. உதவி நாடுவோர், பிரச்சனை கூறுவோர் இதில் கேட்கலாம் என அவர் கூறினார்.

இந்நிலையில் விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வரும் திங்கள் கிழமை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளாராம்.

  • சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் இயக்குநர் அமீர் பேட்டியளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
  • சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் நடிகர்கள் மத்தியில், விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது என கிரிக்கெட் கமெண்டர் சுமந்த் சி.ராமன் கூறியுள்ளார்.
  • தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழப்பார், அவரின் சினிமா வாழ்கையும் அஸ்தமிக்கும் என கூறியுள்ளார்.
  • தமிழருவி மணியன் ரஜினிகாந்த் அரசியல் களம் வருவது நிச்சயம். விஷால் ரஜினியாகி விட முடியுமா என கூறியுள்ளார்.
  • தமிழக அரசு ஜனநாயகத்துடன் செயல்படுகிறது என்பதற்கு நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதே சான்று -அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
  • ஆர்.கே.நகர் தேர்தல் என்பது விஷாலுக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.