Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ரிச்சி படம் வரும் டிசம்பர் 8ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ரிச்சி படம் பற்றி ஷ்ரத்தா பேசினார்.

தமிழிற்கும், தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காகதான் ரிச்சி படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்த வித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடுள்ளேன்.

இப்படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் 'மேகா'. ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இது. தனது கருத்துக்களில் உறுதியாகவும், தான் நம்பும் விஷயங்களுக்கு போராடும் குணமுள்ள கதாபாத்திரம் இது. ரிச்சி படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

இது ஒரு புது வித சினிமாவாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என கூறினார்.