Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் விஷயத்தில் உண்மை வெளிவரும்! முக்கிய அதிகாரி ஓபன் டாக்

சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது நிராகரிக்கப்பட்டது. பின் அவரின் சாலை மறியலை தொடர்ந்து மீண்டும் ஏற்கப்பட்டு பின் நள்ளிரவில் மீண்டும் நிராகரிப்பட்டது.

இது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் விஷால் மட்டும் நிராகரிக்கப்படவில்லை.

72 பேர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் அவரை பிரபலமாக பார்க்கிறோம். நாங்கள் அவரை வேட்பாளராக பார்க்கிறோம். அவரை முன்மொழிந்தவர்கள் நேரில் வந்து நாங்கள் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.

இப்படியிருக்கையில் அவரின் மனுவை எப்படி ஏற்பது. அவர் தன்னை முன் மொழிந்தவர்களை நேரில் சென்று பார்த்து ஆதரவை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது. அப்படி இல்லாத போது இவர் என்ன வேட்பாளர் என கூறியிருக்கிறார். மேலும் அவரிடம் விஷால் தன் மனு ஏற்றுக்கொள்ள பட்டதாக பேட்டிகொடுத்திருப்பது பற்றி கேட்டபோது, நான் அங்கு இல்லை. ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் போது உண்மை வெளிவரும் என கூறினார்.