Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க நடிகர் படம் நல்லா இருந்தா கொண்டாடுங்க, ஆனால்- மெர்சல் படத்தை கூறுகிறாரோ தயாரிப்பாளர்

விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது. ஆந்திரா, கேரளா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் வசூல் மழை செய்துள்ளது படம். இப்படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்பது நமக்கு தெரியும்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஒன்னும் தெரியாதவர்கள் உங்கள் படத்தை பற்றிய தவறான பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து கூறும்போது வேதனையாக இருக்கிறது. அதோடு ரசிகர்களுக்கு உங்க ஹீரோ படம் நல்லா இருந்தா கொண்டாடிட்டு போங்கப்பா, கலெக்ஷன் பத்தி உங்களுக்கு என்ன கவலை என்று பதிவு செய்துள்ளார்.

ஒரு வேளை அவர் மெர்சல் படத்தையும் அவருடைய ரசிகர்கள் குறித்தும் தான் கூறுகிறாரோ என்று பலரும் கூறி வருகின்றனர். இவரது தயாரிப்பில் தீரன் என்ற படம் அண்மையில் வெளியாகி நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.