Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுதம் மேனன் உயிரை காப்பாற்றியவர் இவர்தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கவுதம் மேனன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கினார். அவரின் கார் டிப்பர் லாரியில் மோதியதில் முழுவதும் நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக கவுதம் சிறு காயங்களுடன் தப்பினர். அந்த சமயத்தில் தனக்கு உதவிய HCL நிறுவனத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னன் பற்றி கவுதம் மேனன் ட்விட்டரில் உருக்கமாக பேசியுள்ளார். அவரை பார்த்த பிறகு மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

கவுதம் கூறியிருப்பதாவது..

"என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்."