Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு வித்யாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சேவாக்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்று இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேவாக் ரஜினிக்கு ட்விட்டரில் வித்யாசமாக தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நீங்கள்தான் இப்போதும் எப்போதும் சூப்பர் ஸ்டார்! இன்றுபோல் என்றும் நீங்கள் அன்பில் நனைந்திருங்கள்! @superstarrajini" என சேவாக் ட்விட்டியுள்ளார்.