Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாராட்டுக்களை வாங்கிய அருவி படம் காப்பியடிக்கப்பட்டதா? புதிய சர்ச்சை - இயக்குனர் சொல்லும் உண்மை

அருவி சமீபத்தில் வந்த இப்படத்திற்கு விமர்சனங்கள் நீர் வீழ்ச்சியாய் வந்து விழுந்தது. பலரின் பாரட்டுக்கள் இப்படத்திற்கு மேலும் அழகு சேர்ததது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இப்படத்தை வாழ்த்தியுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை, விஜய் பற்றிய விமர்சனங்கள் இப்படத்தில் இருந்தாலும் அந்த தரப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்ப்பு தான். பெண்களிடம் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை எகிப்திய படமான அஸ்மா (ASMAA) வின் கதை கரு போல தான் இருக்கிறது என சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர்.

2011 ல் வந்த அஸ்மா படத்தில் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த விசயங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் வெளியுலகிறகு தெரியப்படுத்துவாளாம்.

ஆனால் அருவியில் அதே போல ஒரு விசயத்தில் ஒற்றுமையிருப்பதாக தெரிந்தாலும் மற்ற காட்சிகள் எல்லாமே வேறு தான் என்பது படம் பார்த்தவர்களின் கருத்து.

மேலும் இது குறித்து இயக்குனரிடம் கேட்ட போது நான் இப்போது என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் இதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியிருக்கிறார் அருண் பிரபு.

Comments