Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானம் மகனை அன்று காட்டியது ஏன்? சிம்பு சந்தானம் மகனிடம் கொடுத்த வாக்கு- பல தகவல்கள் இதோ

சந்தானம் நடிப்பில் இந்த வாரம் சக்க போடு போடு ராஜா படம் வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்படி நடந்து முடிந்தது என பலருக்கும் தெரியும், அந்த இசை வெளியீட்டு விழாவில் தான் சந்தானம் முதன் முதலாக தன் மகனை அழைத்து வந்தார்.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ஆம், அன்று அவனை வருகிறாயா என்று தான் கேட்டேன், உடனே கோட் எல்லாம் போட்டு கிளம்பிவிட்டான், எனக்கு மேல் அவன் ட்ரெண்ட் ஆகிட்டார்.

அதை விட சிம்பு உன்னை நான் தான் சினிமாவில் அறிமுகப்படுத்துவேன் என்று கூற, இன்னும் குஷியாகிவிட்டான்’ என்று சந்தானம் கூறியுள்ளார்.