Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி ரகுமான் கருத்து

அரசியல் கட்சி துவங்கவுள்ள நடிகர் ரஜினிக்கு ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் கருத்து கூறி வருகின்றனர். நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் விஷால் போன்றவர்கள் ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது "மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என அவர் கூறுகிறார். அது நல்லதாக தான் இருக்கும் என நினைக்கிறேன்" என கூறினார்.

மேலும் ரஜினிக்கு ஆதரவு தருவது பற்றி வருங்காலத்தில் யோசித்து முடிவெடுப்பேன் என ரகுமான் கூறினார்.