Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொத்த விஜய் ரசிகர்களும் ஸ்பெஷலாக கொண்டாடும் முக்கிய நாள்! யாருக்காக தெரியுமா

விஜய் 62 படம் குறித்து அறிவிப்புகள் வெளியானதும் அதை கொண்டாடினார்கள். விஜய் 62 போட்டோ ஷூட் புகைப்படங்களும் வெளியாகின. இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷலான நாள் தான்.

இசைப்புயல் ரஹ்மானின் பிறந்தநாளுக்காக அவர்கள் ஸ்பெஷலாக வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு காரணம் அவரின் மெர்சல் பட பாடல்கள் தான்.

இப்படத்தின் அவர் இசையமைத்து கடந்து வருடம் வெளியிட்ட ஆளப்போறான் தமிழன் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் பல சாதனைகளை செய்தது.

FM களில் Most popular & Most celebrated mass song of 2017 என முக்கிய இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு விஜய் ரசிகர்கள் மறக்க முடியா பாடல் எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்றாகிவிட்டது.

அழகிய தமிழ் மகன் படத்தில் மிக முக்கியமானதாக இப்பாடல் இருந்தது. அந்நேரம் அனைத்து FM களிலும் ஒலிபரப்பபட்டது. இன்னும் பலரும் ரசிக்கும் ஒரு பாடலாக இருக்கிறது.

மேலும் விஜய் நடித்த உதயா படத்திலும் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தற்போது விஜய் 62 படத்திலும் இசையமைக்கிறார். வாழ்த்துக்கள் ரஹ்மான் சார்....