Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழர்கள் அனைவரும் அறிந்த முக்கிய பிரபலம் புஷ்பவனம் குப்புசாமி. இவர் ஒரு நாட்டுபுற பாடகர் என அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவர் பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

இளைய ராஜா, வித்யா சாகர், யுவன், ஜி.வி.பிரகாஷ் என பலரின் இசையில் பாடியுள்ளார். அஜித், விஜய், தனுஷ் என பலரின் படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

புத்தகங்கள், தெய்வீக பாடல்கள் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். பல இடங்களில் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக சங்கீதத்திற்காக இதுவரை எந்த சபாவும் தன்னை பாட கூப்பிடவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Comments