Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினிகாந்துக்கு வந்த புது பிரச்சனை! ரசிகர்கள் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31 டிசம்பர், 2017 ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார். தேர்தலில் நேரடியாக போட்டியிட போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவரின் கட்சியின் பெயர், சின்னம், கொடி எல்லாம் பிரத்யேகமாக உருவாகி வருகிறதாம். சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பாபாவின் அபான முத்திரை இருந்தது.

அவரின் ஆன்மிக அரசியலுக்கு இதுதான் சின்னமாக இருக்கும் என பல பேச்சுகள் இடம் பெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது புது பிரச்சனை வந்துள்ளது.

இதில் பாபா படத்தில் ரஜினியின் முத்திரைக்கான காப்பி ரைட்ஸை முறைப்படி மும்பையை சேர்ந்த பட நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதற்காக பாபா முத்திரைக்கு உரிமை கேட்டு அவர்கள் ரஜினிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்களாம்.

இதனால் படத்திற்காக வாங்கப்பட்ட முத்திரை சின்னம் கட்சிக்கும் பொருந்துமா என ஆலோசனை நடைபெறுகிறதாம்.