Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புகழ்பெற்ற கோவிலில் நடிகர் சூர்யா சிறப்பு வழிபாடு!

சூர்யா ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டமான நாள் தான். அவரின் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் புரமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்ற சூர்யா சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த புதன் கிழமை சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

நவக்கிரக ஸ்தலமான இதில் அவர் புனித குளங்களில் தீர்த்தம் தெளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டாராம். இது புதன் கிரகத்துக்குரிய சிறப்பு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.