Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊழியர்களுக்காக 500 அஞ்ஞாதவாசி டிக்கெட்டுகளை சும்மா கொடுத்த பிரபலம்!

கடந்த புதன் கிழமை பவன் கல்யாண் நடிப்பில் அஞ்ஞாதவாசி படம் வெளியானது. ரசிகர்களுக்கு கொண்டாட்டமானாலும் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது பலரின் கருத்து.

பவன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர். இந்நிலையில் இப்படத்திற்காக சிரஞ்சீவியின் மருமகளும் நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா முதல் நாள் முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டுகளை இலவசமாக கொடுத்துள்ளார்.

அதுவும் ரசிகர்களுக்காக கிடையாது. தான் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் மருத்துவமனை ஊழியர்களுக்காக. இதற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அலுவலகம் முழுக்க இது தான் பேச்சாம்.