Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் சல்மான் கானின் உயிருக்கு வந்த ஆபத்து!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த டைகர் ஜிந்தா ஹை படம் ரூ 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அவர் ரேஸ் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அருகி வரும் உயிரினமான கருப்பு மிளா மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். கடந்த 10 வருடங்களுக்கு முன் இது பெரும் சர்ச்சையானது.

இந்த மானை ஜோத்பூர் பகுதியை சேர்ந்த மக்கள் புனிதமாக கருதி வழிபடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த சில நாட்களில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும் அதே பகுதியில் வைத்து அவரை கொலை செய்வோம் என மிரட்டினார்களாம். இந்நிலையில் ஷூட்டிங்காக அப்பகுதிக்கு வந்த சல்மான் கானை அம்மக்கள் ஒன்று சேர்ந்து தாக்க முன் வந்துள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சல்மான் கான் எஸ்காட் பாதுகாப்போடு மும்பைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய 3 பேரை மும்பை போலிசார் கைது செய்துள்ளனர்.