Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய படக்குழுவுடன் நடிகை தமன்னாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ் என மிகவும் பிசியாக இருப்பவர். அவரின் நடிப்பில் ஸ்கெட்ச் நேற்று வெளியானது. இதில் அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமன்னா இந்தியில் வரவேற்பு பெற்ற குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் கடந்த டிசம்பரில் பாரிஸ் நகரத்தில் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த படத்தின் தொடக்கம் முதலே தமன்னாவுக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு என சொல்லப்பட்டு வந்தது. மேலும் கதையில் சில மாற்றங்களை செய்தாராம் இயக்குனர்.

இதில் தமன்னாவுக்கு விருப்பம் இல்லாததால் படத்தின் ஷுட்டிங்கை தவிர்த்து வருகிறாராம். தற்போது பிரச்சனை காரணமாக மலையாளம் வெர்சன் மட்டும் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இப்படத்தை தமிழில் காஜலும், மலையாளத்தின் மஞ்சிமாவும் நடித்து வருகிறார்கள்.