Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்போ இருந்தே நான் தல ரசிகன்! சொன்னது யார் தெரியுமா

அஜித்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் இப்போதெல்லாம் பளிச்சென்று படம் போட்டு காட்டுகிறது. அவரிடம் பணியாற்றிவர்கள் பலர்.

ஆனால் அஜித்தே நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என சொல்லுமளவுக்கு இடம் பிடித்தவர் ராம் சத்யா. இவர் வேறு யாருமல்ல தற்போதைய பிரபலம் நடிகர் சிங்கம் புலி. இப்போது பிரபல காமெடி நடிகர்.

படத்திற்காக அவர் பெயரை மாற்றிவிட்டாராம். இதற்கு ஒரு விளக்கமும் கூறினார். மனிதனின் பெயர் கொண்டு மிருகமாய் வாழும் இக்காலத்தில், மிருத்தின் பெயர் கொண்டு மனிதனாய் வாழ்வோம் என கூறினார்.

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். அப்போதிருந்தே இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறதாம். பின் அஜித்தை வைத்து ரெட் படத்தை இயக்கினார்.

மேலும் ஆஞ்சநேயா, ராஜா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் சுந்தர்.சியிடம் உதவியாளராக பணி புரிந்தவர் அப்போ இருந்தே நான் தல ரசிகன் என காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது கூறியிருந்தார்.