பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் சினிமா ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் திருப்பிவிட்டவர் இயக்குனர் ராஜமௌலி. இரு படங்களின் மொத்த பட்ஜெட் ரூ 500 கோடியை நெருங்கியது.
அண்மையில் இயக்குனரும் அந்த படத்தின் தயாரிப்பாளரும் குஜராத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களிடத்தில் உரையாற்றியுள்ளனர். அப்போது பாகுபலி படத்தின் போது நேர்ந்த இன்னல்கள் பற்றி மாணவர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு விளக்கம் அளித்த அவர் பாகுபலி 1 படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி தான். ஆனால் ஒவ்வொரு விசயத்தை பார்த்து பார்த்து செய்தபோது அந்த பட்ஜெட்டையும் மீறி படம் போயிக்கொண்டிருந்தது.
அப்போது தயாரிப்பாளரிடம் பேசுகையில் ஜோக் அடிப்போம். மொத்த காசையும் படத்தில் போட்டுவிட்டால் பிறகு குழந்தைகளின் படிப்பு செலவுக்கு எதிர்காலத்தில் என்ன செய்வது?
கொஞ்சமாவது அவர்களுக்கு என எடுத்து வைக்க வேண்டும். படம் வெற்றியானால் தப்பித்தோம். இல்லையெனில் சூதாட்டம் போல ஆகிவிடுமே. பிறகு படத்தின் வெற்றி மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது என அவர் கூறினார்.