Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்தை காலா முந்த காரணம் இதுதானாம்! வெளியான தகவல்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி ரஞ்சித் இயக்கியுள்ள காலா வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் படக்குழுவால் வெளியிடப்பட்டது.

ஆனால் முன்பே இதே மாதத்தில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வெளியாவதாக இருந்தது. இவ்விரு படங்களையும் வெளியிடுவது லைகா நிறுவனம் தான்.

2.0 இன்னும் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நிறையவுள்ளது. இந்த விசயங்களில் சில எப்படியோ கசிந்து வேறு படங்களில் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் சங்கரும் மிகுந்த கவனத்துடன் படத்தை பார்த்து பார்த்து செய்து வருவதால் கொஞ்சம் கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.

படம் தள்ளிப்போன விசயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியாக உடனே அதே மாதத்தில் அந்த நிறுவனம் காலா படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டதாம். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Comments