Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியா வாரியரின் லவ் ஹீரோ ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் முக்கிய சாதனை!

கண் அசைவுகள் மூலம் கண கச்சிதமாய் கவர்ந்திழுத்தவர் பிரியா வாரியர். சமீபத்தில் சமூக வலைதளத்தில் புயலாக மாறியது ஒரு அடார் காதல். பாடல், டீசர் என வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டுள்ளது. இதில் அவரின் காதலானாக நடித்திருப்பவர் ரோஷன் அப்துல் ரஹூஃப்.

இவரும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாவதோடு அதிக ஃபாலோயர்களை பெற்று வருகின்றார். கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு வயது 20. இவர் தனது இளங்கலை பட்ட படிப்பை ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறாராம். நடனத்தின் மீதிருந்த அதிக ஆர்வத்தினால் முறையான பயிற்சிகள் எடுத்துள்ளாரம்.

அதோடு அவர் ஜோடி நம்பர் ஒன் D3-D4 சிசன்3 என்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடன் பிறந்த அண்ணனோடு கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு அடார் லவ் படத்தால் இப்போது இவரை தேடி வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம்.

Comments