Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்போதுள்ள இயக்குனர்களில் அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை

அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார். இவர் இயக்கத்தில் நடிக்க தற்போது பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங்.

அப்படியிருக்க அட்லீ ஏன் இந்த குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை உயரம் சென்றார் என்றால் அவரின் பொறுமையும், இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டது தான்.

அட்லீயின் முதல் படமான ராஜா ராணி ரூ 50 கோடி வசூல் செய்தது, நீண்ட இடைவேளைக்கு பிறகு தெறி படத்தை இயக்கினார், இப்படம் ரூ 150 கோடி வசூல் செய்தது.

பிறகு மீண்டும் பொறுமையாக காத்திருந்து மெர்சல் இயக்கினார், இப்படம் ரூ 250 கோடி வசூல் செய்தது, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரை இயக்க ரெடியாகிவிட்டார்.

எந்த ஒரு இயக்குனரும் தன் சினிமா பயணத்தில் இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஏற்றத்தை முதல் மூன்று படங்களிலேயே சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.