Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையிலேயே பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த அட்லீ

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிட்டார். இவர் இயக்கத்தில் வந்த மூன்று படங்களும் மெகா ஹிட் படங்கள் தான்.

அந்த வகையில் மெர்சல் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம், என ஒரு சிலர் கூற, படக்குழுவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில் நேற்று அட்லீ ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார், அப்போது பலரும் அவரிடம் அடுத்தப்படம் குறித்து கேட்டனர்.

அதற்கு அட்லீ ‘கண்டிப்பாக என் அடுத்தப்படம் தமிழ் படம் தான், ஹீரோ யார் என்பது சர்ப்ரைஸாக வரும், அது மட்டுமின்றி தெலுங்கில் தான் படமெடுக்கவில்லை’ என்று பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.