Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்றிலிருந்து இன்றுவரை விஜய் கடைபிடித்து வரும் ரகசியம் இதுதானாம்!

விஜய் படங்களின் அறிவிப்புகள் வந்துவிட்டால் போதும் படம் வெளியாகும் வரை ரசிகர்களுக்கு தூக்கம் வராது என்றே சொல்லலாம். அதில் முதல் பட போஸ்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

அதிலும் விஜய்யின் லுக் ரசிகர்களை பெரியளவில் கொண்டாட வைக்கும். விஜய் எப்போதுமே ஸ்டைல், உடையில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்துவார். போட்டோ ஷூட்டுக்கு கூட அவர் இதை கடைபிடிப்பாராம்.

அப்படி பார்க்கையில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு சமயத்தில் வெளியான மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் எப்படியான இடம் பிடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே.

படப்பிடிப்பில் விஜய் அவ்வளவாக பேசமாட்டார். ஒரே டேக்கில் அசத்திவிடுவார் என சொல்வார்கள். ஒரு ஷாட் முடிந்ததும் அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து விடுவாராம்.

அப்போது அடுத்த காட்சிக்கான சேஞ்ச் ஓவர் அவரின் மனதில் ஓடிக்கொண்டிருக்குமாம். யோசித்து கொண்டு ஃபீல்டிக்கு போய் நின்றதும் அந்த ஸ்டைலுக்கு அப்படியே மாறிவிடுவாராம்.

இதனால் தான் அவரின் எல்லா விசயங்களும் நன்றாக வெளிப்படுகிறது. அதை அவர் தக்க வைத்திருப்பதால் தான் எப்போதும் அவருக்கு தனி வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள்.

Comments