Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமுடன் மோதலில் இறங்கும் முக்கிய நடிகர்! பிறந்தநாளில் வந்த முக்கிய செய்தி

விக்ரம் தமிழ் சினிமாவில் தனி ஒரு கலைஞனாக தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்தவர். இவர் நடித்த படங்கள் குறைந்த எண்ணிக்கை என்றாலும் சாதனைகள் மிகப்பெரியது.

சேது, பிதாமகன், ஐ என ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னும் ஆழமாய் பலரின் மனதிலும் பதிந்திருக்கும். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரின் அடுத்தடுத்த சாதனைகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

அவர் தற்போது சாமி 2 படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் முன்பே நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் சூழ்ந்துள்ள நேரத்தில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் விநாயகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது...

கேரளாவை சேர்ந்த இவர் பாடகர், இசை அமைத்தல் என செய்து வருகிறார். கடந்த வருடம் வெளியான கம்மாட்டிபாடம் படத்திற்காக கேரள அரசு விருதையும், வட அமெரிக்கன் விருதையும் பெற்றுள்ளார்.