Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை அதிர்ச்சியாக்கிய சம்பவம்! கோபத்தின் உச்சம்

டிவி சானலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அம்மணி என்ற நல்ல கருத்துள்ள படத்தை இயக்கி பாராட்டை பெற்றவர்.

ட்விட்டரில் அவர் அடிக்கடி சமூகத்தில் தற்போது நிகழும் சம்பவங்களுக்கு குரல் கொடுப்பதோடு கருத்துகளை பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் நிர்மலா தேவி சம்பவம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கல்லூரி பெண்களை தவறான வழிமுறைக்கு அழைத்து செல்வதாக அந்த பேராசிரியை மீது வந்த புகார் பல பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லட்சுமி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவியின் போன் கால் பேசியதை கேட்டேன். அதிர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. யாராவது என்ன நடக்கிறது என்ன சொல்ல முடியுமா? இது போல கல்லூரி பெண்களுக்கு ஏதாவது நடைபெறுகிறது.

நாங்கள் மொத்தமாக அதிர்ச்சியில் இருக்கிறோம். அந்த நாட்களில் சிலர் மகிழ்ச்சியாக இருக்க படம் தயாரிப்பார்கள், பெண்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள் என கேட்டிருக்கிறோம். ஆனால் இது கல்வி நிறுவனங்கள் வரை சென்றுவிட்டதா என்ன? நல்ல முன்னேற்றம் என கோபப்பட்டுள்ளார்.

Comments