Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் காலா படத்திற்கு வந்த சர்ச்சை! முக்கிய அமைச்சர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இன்று இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் அரசியல் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பாடல்கள் அண்மையில் யூடுயூபில் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் காலா படத்தின் பாடல்களை விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் நடித்து வந்த திரைப்படங்களில் மது, புகை பிடிப்பது எல்லாம் கிடையாது.

தமிழகத்தில் கலவரத்தை யார் தூண்ட நினைத்தாலும் தமிழக அரசு அதை ஏற்காது. அந்த வகையில் காலா படத்தின் பாடல்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும். சுயநலத்திற்காக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய கூடாது. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக நினைத்தால் அது முடியாது என கூறியுள்ளார்.

Comments