Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்!

நாகினி சீரியல் பலரின் மனங்களை கவர்ந்த ஒன்று. ஹிந்தியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வந்தாலும் நம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

2 ம் சீசனை தொடர்ந்து 3 ம் சீசனில் ஏற்கனவே நாகினி அடியெடுத்து வைத்து விட்டாள். இதில் பாம்பு பெண்ணாக நடிப்பவர் மௌனி ராய். இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கென் கோஷ் இயக்கும் மெஹ்ருன்னிஷா என்ற சீரியலில் நடிக்கிறாராம்.

மன்னர் ஜஹாங்கிரின் மனைவி நூர்ஜகானாக மௌனி ராய் நடிக்கிறாராம். அந்த நூர்ஜகானுக்கு மெஹ்ருன்னிஷா என இன்னொரு பெயரும் இருக்கிறது. இவர்களின் வாழ்க்கை சீரியலாக எடுக்கப்படுகிறது.

இதில் அவருக்கு ஜோடியாக ஏக்தா கபூர் நடிக்கிறாராம். இந்த சீரியலுக்கான ஒர்க்‌ஷாப்பில் மௌனி ஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Comments