Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் படத்திற்கு பிரபல நடிகரின் மகளால் கடும் எதிர்ப்பு! வெடிக்கும் புது சர்ச்சை

கீர்த்தி சுரேஷ் தற்போது பெரும் பாராட்டு மழையால் நனைந்துள்ளார். அண்மையில் அவரின் நடிப்பில் மகாநதி படம் வெளியானது. பிரபல நடிகை சாவித்திரியாக இதில் நடித்திருந்தார்.

தமிழில் நடிகையர் திலகம் என இப்படம் வெளியானது. படத்திற்கு நல்ல கலெக்‌ஷன். நிறைய பாராட்டும் படியான விமர்சனங்கள். பல பிரபலங்களும் கீர்த்தியை வாழ்த்தியிருக்கிறார்கள்.

இப்படத்தில் சாவித்திரியை ஜெமினி கணேசன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார். பின் படத்தோல்வி, சமூக அந்தஸ்து குறைவால் ஜெமினி கணேசன் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவார்.

இதனால் அதிர்ச்சியான சாவித்திரி அவரால் குடிப்பழக்கத்திற்கு ஆளாவது போல காட்சிகள் இடம் பெற்றது. ஆனால் படத்தை பார்த்த சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டிடீஸ்வரி குறை எதுவும் சொல்லாமல் பாராட்டினார்.

ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாவித்திரிக்கு ஜெமினி தான் குடிக்க கற்றுக்கொடுத்தார் என காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.

அவரால் எந்த ஒரு பெண்ணுக்கும் பாதிப்பு கிடையாது. தன்னை விரும்பி பெண்களை தான் அவர் திருமணம் செய்துகொண்டார் என கூறியது சமூகவலைதளத்தில் சர்ச்சையாகியுள்ளது.

Comments