Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீக்கு முதன் முதலாக விஜய்யுடன் ஏற்பட்ட அறிமுகம், ரஜினி கொடுத்த பாராட்டு, அட்லீ குறித்த சுவாரஸ்ய தகவல்

அட்லீ இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இயக்குனர் ஆகிவிட்டார். என்ன தான் காப்பி, திருட்டு என்று பலர் புலம்பினாலும் ஹிட் மேல் ஹிட் கொடுத்து மேலும் பலரை புலம்ப தான் விடுகின்றார்.

அட்லீ முதன் முதலாக குறும்படம் வாயிலாக தான் ஷங்கருக்கு பழக்கம், அவர் இயக்கிய முகப்புத்தகம் குறும்படம் செம்ம வைரல் அந்த சமயத்தில்.

இதில் இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான் நடித்திருந்தார், அதன் வாயிலாக ஷங்கரிடம் அட்லீ உதவி இயக்குனராக அறிமுகமானார்.

அட்லீயிடம் ஷங்கர் ராஜா ராணி முடித்து விட்டு கூட நீ என்னிடம் வந்து மீண்டும் வேலைப்பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினாராம்.

அந்த அளவிற்கு அவரின் செல்லப்பிள்ளை தான் அட்லீ, ஏனெனில் எந்திரன் படத்தில் இறங்கி வேலைப்பார்த்து ஷங்கரை செம்ம உற்சாக மைண்ட் செட்டில் வைத்திருப்பாராம்.

ரஜினியே அட்லீயை மனம் திறந்து பாராட்டியுள்ளார், அதனால் தான் ராஜா ராணி பர்ஸ்ட் லுக்கை கூட சூப்பர் ஸ்டார் கையால் வெளியிடப்பட்டது.

அந்த அளவிற்கு அட்லீ மேல் அன்பு அதிகம், ஷங்கரின் நண்பன் படத்திலும் அட்லீ தான் உதவி இயக்குனர், அப்போது அட்லீயின் வேலையை பார்த்த விஜய் ‘ஒரு நாள் நம்ம படம் பண்றோம் நண்பா’ என கூறியுள்ளார்.

ஆனால், ஒரு படமில்லை இரண்டு பட வாய்ப்பு கொடுக்க, அதிலும் அட்லீ சிக்ஸர் அடித்து தன்னை நிரூபித்துவிட்டார். இப்படித்தான் பலர் புலம்பினாலும் அட்லீயின் வெற்றி அமைதியாக உச்சத்தை நோக்கியே பயணிக்கின்றது.