Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கிறார். காரணம் தமிழ், தெலுங்கு என மொத்த திரையுலகமும் அவரை மகாநதி படத்திற்காக வாழ்த்தியுள்ளார்கள்.

தமிழில் அவர் நடித்த அப்படம் நடிகையர் திலகம் என கடந்த மே 11 ல் வெளியானது. மறைந்த பிரபல் நடிகை சாவித்திரியாக அவர் இதில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு அமெரிக்காவில் பிரிமியர் காட்சியிலேயே பாராட்டை அள்ளியது. தற்போது இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆஃபிசில் இடம் பிடித்துள்ளது.

இந்த இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இப்படம் $ 62 ஆயிரம் டாலர்களை வசூலித்துள்ளது. முதல் இரு வாரங்களை சேர்த்து பார்க்கையில் $ 2.5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் அமெரிக்க பாக்ஸ் ஆஃபிசில் $ 2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் 120 இடங்களில் ஓடும் மகாநதி அங்கு டாப் 10 தெலுங்கு படங்களில் ஒன்றாக வந்துள்ளது.