Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழக மக்களின் உணர்வை மதிக்காத இயக்குனர் ஷங்கர்- மோசமாக திட்டிதீர்க்கும் ரசிகர்கள்

தமிழ்நாட்டு மக்கள் சினிமா பிரபலங்களை தங்களது பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து கொண்டாடுவார்கள். அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஆனால் அப்படி ஒரு மரியாதைக்கு அவர்கள் தகுந்தவர்களா என்பது தான் சந்தேகம். தற்போது தூத்துக்குடியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் IPL விளையாட்டில் CSK ஜெயித்திருந்தது. அதற்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நேற்று எப்படிபட்ட ஒரு பிரச்சனை நடந்தது அப்போது தெரியவில்லை CSK முக்கியம் இப்போது சம்பவம் குறித்து பதிவிடுகிறீர்கள்.

சமூக அக்கறை எல்லாம் திரையில் மட்டும் தானா என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு ஷங்கர் CSK குறித்து போட்ட டுவிட்டை நீக்கியிருக்கிறார்.