Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான நேரத்தில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி கொடுத்த ஸ்பெஷல்!

டிவி சானல் மூலம் பல ரசிகர்களையும் ஈர்த்தவர் டிடி. பல பிரபலங்களை நேர்காணல் செய்து அவர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியா முழுக்க ஐ.பி.எல் கிரிக்கெட் மீதான மோகம் தான் இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் இணையதளத்தில் பார்க்கும் வசதி கொண்ட ஒரு இணையதளத்தின் விளம்பரத்திற்கு டிடி வந்துள்ளார். ரன்பீர் கபூர் என சில பிரபலங்கள் இதில் வந்திருக்கிறார்கள்.

தற்போது டிடி திவ்யதர்ஷினியும் இதில் இறங்கிவிட்டார். இதை ஒரு போட்டி என்றே சொல்லலாம். கிரிக்கெட் பிரியர்கள், நடந்து கொண்டிருக்கும் போட்டிகள் குறித்த தங்கள் எண்ணங்களை இதில் பதிவிடலாம்.

அவர்களின் கருத்தும் போட்டியுடன் ஒத்துப்போனால் பரிசுகள் இருக்கிறதாம். பரபரப்பாக நடைபெறவிருக்கும் இன்றைய இறுதி போட்டியில் ஜெயிக்கபோவது சென்னை சூப்பர் கிங்ஸா ?? இல்லை சன்ரைஸர்சா என பொறுத்திருந்து பார்ப்போம்.