Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்போது இல்லை அப்போதே முருகதாஸ் சூர்யா ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா இரண்டு படத்தில் நடித்துள்ளார். அந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றது.

ஆனால், இந்த கூட்டணிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, தற்போது வரை அதன் பிறகு இணையவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் சூர்யாவின் NGK, விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 ஆகிய படங்கள் தீபாவளிக்கு மோதவிருக்கின்றது.

இதை தொடர்ந்து விஜய், சூர்யா ரசிகர்களுக்கிடையே கடும் போட்டி நடந்து வருகின்றது, இருவரும் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆனால், துப்பாக்கி, மாற்றான் சமயத்திலேயே சூர்யா ரசிகர் ஒருவர் முருகதாஸிடம் ஏதோ சொல்ல, அதற்கு முருகதாஸ் ‘பாப்பா தள்ளி போய் விளையாடு’ என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.

பார்ப்போம், இந்த தீபாவளிக்கு யார் பாப்பா யார் ஹீரோ என்று என ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.