Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் இவ்வளவு மோசமானவரா?- போலீஸில் அவர் மீது வந்த புகார்

நடிகர் சங்கத்தை போல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.

இதில் வெற்றி பெற்று ஜாகுவார் தங்கம் தலைவர் பதவியை ஏற்றார். ஆனால் அவரது அணியைச் சேர்ந்த மற்றவர்கள் வெற்றி பெறவில்லை. இதனால் ஜாகுவார் தங்கத்துக்கு, மற்ற பதவிகளில் இருக்கும் அவரது எதிரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தங்களை செயல்பட விடாமல் ஜாகுவார் தங்கம் மிரட்டுவதாக நேற்று போலீசில் புகார் அளித்திருந்தார் ஏ.எம். ரத்னம். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதோடு பத்திரிக்கையாளர்களிடம், என்னை துரைசாமி , ஜம்பு, நந்த கோபால் செட்டி மற்றும் ஏ.எம்.ரத்தினம் ஆகியோர் சங்கத்தின் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். சங்கத்தை பூட்டியும், சங்கத்தில் உள்ள CCTV கேமராக்களை அகற்றுமாறும் மிரட்டுகிறார்கள்.

மேலும் என் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது எனவே கமிஷ்னர் அலுவலகத்தில் இவர்கள் 4 பேர் மீது புகார் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.