Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேருந்துகளில் கலக்கும் மியா கலிஃபா, சன்னி லியோன்! இந்தியாவில் இப்படியும் ரசிகர்கள்

ஆபாசம் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வரும் முகங்கள், மியா காலிஃபா, சன்னி லியோன் தான். இந்தியாவில் சன்னி என்றால் உலக அளவில் மியா காலிஃபா. கவர்ச்சிக்கு பேர்போன இவர்களை பற்றி எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் யாரும் வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள்.

ஆனால் கேரளாவில் உள்ள ஒரு தனியார் பேருந்து நிறுவனர் அம்பாடி என்பவர் இவர்களை வெளிப்படையாக காட்டியுள்ளார். அதாவது, பொதுவாக பேருந்துகளில் போட்டோ வைப்பது என்றால் ஒரு சாமி படமோ அல்லது ஒரு குழந்தையின் படமோ அல்லது தனக்கு பிடித்தமான நடிகரின் படமோ தான் வைப்பார்கள்.

ஆனால் இவரோ தனது பேருந்துகளில் ’போர்ன்’ ஸ்டார்களான மியாகாலிஃபா, சன்னிலியோன், ஜானி சின்ஸ், ஆவா அடம்ஸ் போன்றோரின் படங்களை வரைந்து வைத்துள்ளார்.

இதனால் கேரளாவில் இவரது பேருந்துகள் பிரபலமடைந்து வருகின்றன. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் முதல் சாய்ஸாக இவரது பேருந்தைதான் குறி வைக்கிறார்கள். இதனாலயே இவரது பேருந்துகளுக்கு அங்கு கடும் கிராக்கி.

இதையெல்லாம் பார்த்த ஒருவர் அவற்றை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதுதான் இவை...