Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த பழைய நடிகர்! காமெடியாக முடிந்த சந்திப்பு

ரஜினி 42 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் பெரும்பாலோர் தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு தயாரிப்பாளர், இயக்குனர் என வெவ்வேறு ஃபீல்டில் இறங்கி விட்டனர்.

அவ்வாறான ஒருத்தர் தான் சங்கிலி முருகன். அவர் சமீபத்தில் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனியாக நீண்ட நேரம் பேசியுள்ளார். அதில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசியதாக தெரிகிறது. சங்கிலி முருகனின் அரசியல் அறிவை பார்த்து வியந்த ரஜினி உடனே தன்னுடன் அரசியலில் ஈடுபடலாமே என கேட்டுள்ளார். அதற்கு அவர் அரசியல் பேசுவதோடு சரி செயலுக்கெல்லாம் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை என மழுப்பியுள்ளார்.

அதன்பின் ’நான் படமொன்றை தயாரிக்கலாம்னு இருக்கேன் நீங்கள் தான் கதாநாயகனாக நடித்து கொடுக்க வேண்டும்’ என தான் வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார். ரஜினியை வைத்து பல இயக்குனர்கள் இயக்க காத்திருக்கும் நிலையில் இவர் இப்படி கேட்டதும் ஒரு நிமிஷம் ரஜினிக்கு தலையே சுற்றி விட்டது. ‘ஏற்கனவே பல படங்கள் ஒப்பு கொண்டுவிட்டேன். கே.எஸ்.ரவிக்குமாருடன் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளேன், வேண்டுமென்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவராக நீங்கள் இருங்களேன்’ என கூறி அவரை சமாளித்து அனுப்பவதற்குள் ஒரு பாடுபட்டுவிட்டார் ரஜினி.