Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் வீட்டில் கதறி அழுத பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களே இயக்குனர்களுக்கு பேவரட்டாக இருப்பவர்கள். அப்படி பல இயக்குனர்கள் ஒரு முறையாவது இவருடன் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கும் ஒரு நடிகர் அஜித்.

இவரின் தீவிர ரசிகராக த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

இதில் அவர் பேசுகையில் ‘அஜித் சாரின் தீவிர ரசிகன் நான், தீனா படம் பார்த்து தான் தல ரசிகன் ஆனேன். ஒரு முறை அஜித் சார் இனி நான் எந்த பேட்டியும் கொடுக்க மாட்டேன் என்றார்.

அன்றைய தினம் அஜித் சார் வீட்டின் முன்பு நின்று கத்தி கூச்சலிட்டு, அழுதுவிட்டு வந்தேன், அந்த அளவிற்கு அவர் மேல் எனக்கு அன்பு உண்டு’ என்று கூறியுள்ளார்.