Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்

தமிழில் இன்னும் வளர்ந்து வரும் நடிகராகவே இருப்பவர், ஜெய். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு அந்த படத்தை தவிர்த்து ராஜாராணி படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு அவர் நடித்த எப்படமும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர் டிரெண்டிகில் தான் இருக்கிறார். இதற்கெல்லாம் அவர் அடிகடி சிக்கும் சர்ச்சைகளே காரணம்.

இந்நிலையில் அவரது நடிப்பில் ஜருகண்டி என்ற பெயரில் ஒரு படம் வெளிவர இருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலையாள உலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படம் அங்கு ஏற்கனவே வெளியான போக்கிரிராஜா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

முதல் பாகத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த மம்முட்டியின் தம்பி கேரக்டரில் தான் ஜெய் நடிக்க இருக்கிறார். இப்படத்தை புலிமுருகன் என்ற ஹிட் படத்தை இயக்கிய வைஷாக் இயக்குகிறார்.