Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாவின் ரூட்டையே மாற்றிவிட்ட சிம்பு

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்கள் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே தனது காதல் படங்கள் மூலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் டி.ராஜேந்தர். முதன்முதலில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு அடித்தளம் போட்டவரும் அவர்தான்.

ஆனால் அவரது திரை பயணத்தில் சில காலமாக இடைவெளி விழுந்ததாகவே தெரிகிறது. ஏனெனில் அவரது இயக்கத்தில் கடைசியாக 2007ல் வெளிவந்த படம், வீராசாமி. அதன்பிறகு அவரது இயக்கத்தில் படம் வருகிறது என்று அறிவிப்புகளெல்லாம் வெளிவரும் ஆனால் ஒன்றும் நடந்ததாக இருக்காது.

அதுபோல் தான் சில வருடங்களுக்கு முன்னால் இ.கே.நகர் இடைத்தேர்தல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் அதையும் நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் சிம்பு தானாம். அவர் தான் ’காதல் படம் தான் உங்களுக்கான அடையாளம் எனவே அதன் வழியே சொல்லுங்கள்’ என ஆலோசனை வழங்கினாராம்.

அதனாலயே தற்போது இன்றைய காதல்டா... என்ற காதல் படத்தை இயக்க இருக்கிறாராம். சிம்பு மாநாடு என்ற அரசியல் படத்தில் நடிப்பதால்தான் அப்பாவின் ரூட்டை மாற்றிவிட்டார் என கூறப்படுகிறது.