Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிட் படத்தில் பணியாற்றிய பிரபலம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் நானா படேகர். இவர் இதற்கு முன்பு நடித்த 'Ab Tak Chhappan' என்ற படத்திற்க்கு திரைக்கதை எழுதியவர் ரவிசங்கர் அலோக். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் ஈட்டியது.

இவர் நேற்று மதியம் திடீரென அபார்ட்மெண்ட் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கடந்த ஒரு வருடமாகவே மனஅழுத்தத்தில் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.